திருக்குறள் கதைகள்
இயல்: பாயிரவியல்
பால்: அறத்துப்பால்
அதிகாரம்: 2 [வான் சிறப்பு]
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
பொருள்:
கடலிலிருந்து நீரை எடுத்துகொண்ட மேகம் அந்த நீரை மழையாகப் பெய்யாமல் போனால், பரந்த கடல் கூடத் தன் நீர் வளத்தை இழந்து விடும்.
கதை:
ராஜ் உனக்கு இந்த ஊர் பிடிச்சு இருக்குதா?.
ரொம்ப பிடிச்சு இருக்கு டாடி.
ஸ்கூல்லாம் எப்படி இருக்கு?
டாடி, இங்க ஸ்கூல் Couching different ஆ இருக்கு. போக போக Set ஆகிடும்னு நினைக்குறேன்.
Very good. Miss class எப்படி எடுக்குறாங்க.
ரொம்ப பிடிச்சுருக்கு டாடி. இன்னிக்குக் கிளாசுலே மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ராஜ்.
"Interesting, உனக்கு புரிஞ்சது சொல்லு. பார்ப்போம்." என்றார் மகனிடம், ஆவலை வெளிக்காட்டி.
"வெய்யில் அடிக்குது இல்ல, அந்த சூட்டுல கடல் தண்ணி எல்லாம் ஆவியாகி மேல போயி மேகமா மாறிடும். அந்த மேகம்தான் மழையாப் பெய்யுது" என்று விளக்கினான் ராஜ்.
"வெரி குட்" என்று மகனை வாரி அணைத்துக் கொண்டார் ரணசிங்கம்.
"ஆமாம் நான் ஒரு கேள்வி கேக்கறேன், பதில் சொல்லுவியா?" என்றார் ரணசிங்கம்.
"Of course dad", என்றான் ராஜ்.
"கடலிலே இருந்து நெறையத் தண்ணி ஆவியாப் போயிடுது இல்ல, ஆனா கடல்ல தண்ணி கொறையறதே இல்லையே அது ஏன்?" ரணசிங்கம்.
"ஏன்னா அந்தத் தண்ணி எல்லாம்தான் மழையா கடலுக்கே திரும்பி வந்துடுதே!" என்றான் ராஜ்.
"வெரி குட்" என்றார் ரணசிங்கம்.
"But dad, எனக்கு ஒரு டவுட். ஒரு வேளை ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையா மாறாம அப்படியே மேகமா ஆகாயத்துலேயே இருந்துட்டா என்ன ஆகும்?"
"அப்படி ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையாத் திரும்பி வரலேன்னா கடல்ல தண்ணி குறைஞ்சு, கடைசில கடலே வத்திப் போனாலும் போயிடும்" என்றான் ரணசிங்கம்.
"அப்படி நடந்துடும்மா டாடி" என்றான் ராஜ்.
"நடக்காது. கவலைப் படாதே. ஆனா நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். உலகத்தில எல்லாமே போயிட்டுப் போயிட்டுத் திரும்பி வரணும். அப்பதான் உலகம் இயங்கும் என்றார் ரணசிங்கம் ஏதோ யோசனையுடன்".
ஒரு வருடங்களுக்கு பிறகு ஊர் பெரியவர் ரணசிங்கத்தின் வயல் பக்கம் சென்ற போது வயல் முழுவதும் பசுமையாக இருந்ததையும் அங்கு சிலர் வேலை செய்ததையும் கண்டு. ஆச்சரியம் அடைந்தார்.
பலே.. சொன்னத செய்துட்டியே. எப்படிப்பா இது சாத்தியம்?.
"ஐயா, ஒருநாள் என் பையன்கிட்ட பேசும் போது தான் எனக்கு ஒன்னு தோனுச்சு. எப்படி கடல் தண்ணீர் மழையா மாறி மறுபடியும் கடல்ல சேருது. அதே மாதிரி தான் நம்ம நிலத்தடி நீர் எடுக்குறோம். ஆனால் மறுபடியும் நிலத்துக்கு கொடுக்குறோம்மா தோணுச்சு.உடனே அதுக்கு என்ன பன்றதுன்னு தேடுனேன். அப்ப தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு பற்றி படிச்சேன். என்னோட வீட்லயும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைச்சேன். அதோட என்னோட வயல்ல இருந்த மண்னை வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைத்த ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு கொடுத்தேன்.ஆறு மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்தது. தற்காலிகமா இயற்கை உரங்கள் பயன்படுத்தி தோட்டம் போட்டு பார்த்தோம். அதுதான் நீங்க இப்போ பார்க்குறீங்க.
படிச்சவன் படிச்சவன் தான். நீ சாதிச்சிட்ட தம்பி. நம்ம ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் இத சொல்லுறேன். அவுங்களுக்கும் நீ தான் வழிகாட்டனும்.
கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவி செய்றேன்.
காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.