Friday, October 23, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 12

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


பொருள்:

உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.


கதை:

ஆஹா.. அம்மா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு...

ஆமாப்பா... 

அம்மா மழை தான் மரங்களின் வளர்ச்சிக்கும் காரணமா?

ஆமாண்டா அமுதன். மழை பெய்வதனால் தான் தானியங்கள் விளைகின்றன. மேலும் மழை நீரே ஆறாகவும், ஊற்றாகவும் அமைந்து ஊருணியும் நிறைந்து உணவாகவும் மாறுகின்றது.

சுருக்கமா சொல்லனும் அப்படின்னா உயிர்களின் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மழைதான் காரணம்.

ஓ...

குறிப்பாக சொல்லனும்ன்னா மழை நீரே உணவாகவும் அமைகின்றது.

மழைநீர் உணவாக அமையுதா... அது எப்படி அம்மா...

நம்ம வீட்ல சாப்பாடு இருக்குடா அமுதன். அதுனால சாப்பிடுறோம். 

ஆனா அந்த சாப்பாடு கூடாத கிடைக்காதவங்க நிறைய பேர் இருக்காங்கப்பா. அவுங்களுக்கு தண்ணீர் தான் உணவே...

ரொம்ப பாவம்ல அம்மா அவங்க எல்லாம்..

ஆமாப்பா.. அதுனால தான் நீ சாப்பாட வேஸ்ட் பண்ணும் போது அம்மா உன்கிட்ட கோவிச்சுக்குவேன்.

சாரி அம்மா... இனிமேல் நான் சாப்பாட வேஸ்ட் பண்ண மாட்டேன்.

இந்த மழையின் சிறப்பைத் தான் திருவள்ளுவர், திருக்குறள்ல "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை", ன்னு சொல்லி இருக்காங்க.

காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



2 comments:

  1. தானியங்கள் என வர வேண்டும் தாணியங்கள் 3 சுழி தவறு

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா!! தவறை சரி செய்துவிட்டேன்.

      Delete