Thursday, October 22, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 11

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


பொருள்:

உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ வைப்பதால், மழையை அமிர்தம் என்றே கருத வேண்டும். 


கதை:

ஐயோ...இந்த மழை ஏன் தான் வருதோ தெரியலை... அமுதன் வருத்தப்பட.

அமுதா அப்படி சொல்லக்கூடாது என்று அவனது தாய் கூறினால்.

ஆனால் அம்மா, இந்த மழை என்னோட யூனிபார்ம் டிரஸ், Shoes, books, எல்லாத்தையும் நனைச்சிடுச்சு.

சரியா போச்சு... உனக்கு ஸ்கூல்ல உங்க மிஸ் மழை பத்தியெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா...

மழையை பற்றி தெரிஞ்சுக்க என்ன இருக்குது....

நான் நினைச்சது சரிதான். உனக்கு மழையை பற்றி நான் தான் கிளாஸ் எடுக்கனும்...

நீ படிக்குற ஸ்கூல்ல தமிழ் Subject இருக்குல்ல....

ஆமா,ஆமா, இருக்கு...

அதுல திருக்குறள் உண்டா...

அய்யோ..அம்மா தப்பித்தவறி திருக்குறள் மட்டும் சொல்லிடாத...

அத மனப்பாட பகுதின்னு வச்சு Exam-ல கொலையா கொல்லுறாங்க.

இதுலாம் போதாதுன்னு திருக்குறள் Competition வச்சு Price கொடுக்குறாங்க.... 

கண்ணா திருக்குறள் நீ நினைக்குற மாதிரி கஷ்டம் இல்லைப்பா.. அதுல திருவள்ளுவர் என்ன சொல்லுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டா Easy தான்...

சொல்லுங்க..கேட்குறேன்...

மனிதன் வாழ அத்தியாவசியமானது எது?

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்...

நீ சாப்பிடும் போது விக்கல் வந்தா என்ன பண்ணுவ?

தண்ணி குடிப்பேன்.

அந்த தண்ணீர் எங்க இருந்து வருது?..

பூமிக்கு அடியில் இருந்து...

அந்த பூமிக்கு அடியில தண்ணீர் எப்படி போச்சு....

அது வந்தும்மா......

சரி மழை அப்படின்னா என்ன?.

ம்ம்ம்... வானத்துல இருந்து பூமிக்கு வர்ற தண்ணீர் தான் மழை..

இப்போ புரியுதா.. பூமிக்கு அடியில தண்ணீர் எப்படி போச்சுன்னு...

ம்ம்ம்ம்...

மழைன்னா தண்ணீர். தண்ணீர் யாருக்கு எல்லாம் தேவை..

ம்ம்ம்ம்.... எல்லா உயிரினமும் உயிர் வாழ தண்ணீர் தேவை.

ஆமாப்பா.... அதே மாதிரி பூமியில விழுகுற தண்ணீர் பூமியின் சூட்டு நிலையை சமப்படுத்துகின்றது....

ஓ.... இவ்வளவு நன்மைகள் இருக்குதா மழையில்...

ஆமாம் அமுதா... மழை இல்லாவிட்டால் மக்கள் இல்லை....

அதுனால தான் திருவள்ளுவர் வான் சிறப்பு அதிகாரத்தில் முதல் திருக்குறள்ல மழையை அமிர்தம்ன்னு சொல்லி இருக்காங்க ..... 

இப்போதாம்மா எனக்கு அந்த திருக்குறள் புரியுது....

இது மாதிரி மழையை பற்றி நிறைய இருக்கு அமுதா...  டெய்லி ஒண்ணு ஒண்ணா சொல்லுறேன்....


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



No comments:

Post a Comment