Thursday, October 29, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 13

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


பொருள்:

நீர் சூழ்ந்த உலகம் இது  என்றாலும், வானம் பொய்த்து விட்டால், உலகின் உள்ளிருந்து பசிக்கொடுமை (மக்களை) வாட்டும்.


கதை:

அப்பா! அப்பா! என்று ஹரி அழைத்தான்.

என்னப்பா? என்று கேட்டார் அழகேஷன்.

அப்பா எங்க ஸ்கூல்ல நாளைக்கு பேச்சுப் போட்டி இருக்குப்ப. அதுக்கு நானும் பேரு கொடுத்து இருக்கேன் அப்பா. 

நல்ல விசயம் ஹரி. தலைப்பு என்ன?.

தலைப்பு 'மழை' அப்பா.

அருமையான தலைப்பு. 

ஆனால் அப்பா எனக்கு மழை பற்றி அவ்வளவா தெரியாது. நீங்க கொஞ்சம் சொன்னா நான் competition க்கு Prepare பன்ன வசதியா இருக்கும்.

இவ்வளவு தானா? சரி நீ போய் Refresh ஆகிட்டு வா. நம்ம வெளிய போகலாம்.

Okay அப்பா..

After 10 min

அப்பா நாம எங்க போறோம்.

Beach க்கு போறோம்.

ஹய்யா ஜாலி ஜாலி...

Kids playing...

வீட்டுக்குப் போவோமா...

சரிப்பா..

இப்போ நீ பாத்தியே கடல். அந்த இடம் எப்படி இருக்கு ஹரி.

ம்ம்ம்... ஒரு பக்கம் முடிவே இல்லாத கடல். இன்னோரு பக்கம் நிலம்.

கரெக்ட். அதே மாதிரி தான் இந்தியாவும் முன்று பக்கம் நீரால், ஒருபக்கம் நிலத்தால் ஆனது.

எனக்கு இது தெரியும் அப்பா. எங்க ஸ்கூல்ல மிஸ் இது பத்தி சொல்லி இருக்காங்க.

அப்போ உலகத்தில்  நீர் விழுக்காடு தான் அதிகம்ன்னு உனக்கு நல்லாவே தெரியும்ன்னு நினைக்குறேன்.

ஆமாப்பா...மிஸ் சொன்னாங்க.

வெரி குட். ஹரி எவ்வளவு தான் நீரின் அளவு அதிகமா இருந்தாலும் மழை இல்லாட்டி உலகம் முழுவதும் பசியால் வாடும்.

அப்பா நீங்க சொல்லுறது புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு....

ஹரி மழை பெய்தால் தான் அணைகள் நிறையும். ஆறுகளில் தண்ணீர் வரும். விவசாயம் பண்ண முடியும். 

மழை பெய்யாட்டி விவசாயம் பண்ண முடியாது. விவசாயம் பண்ணலைன்னா மக்கள் யாரும் சாப்பிட முடியாது.

ஆனா அப்பா மழை எப்படி பெய்யாமல் போகும்.

மழை பெய்யாமல் போறதுக்கு மனிதன் தான் காரணம்.

என்னப்பா சொல்லுறீங்க?.

ஆமாப்பா.. நம் முன்னோர்கள் காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது. ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள்ன்னு அனைத்தும் நிரம்பி வழிந்தது.நாடும் பச்சை பசேல் என செழிப்பாக இருந்தது.

எங்க அப்பா காலத்துல தண்ணிய ஆறு, குளத்துல பாத்தாங்க. நான் கிணத்துல பார்த்தேன். என்னுடைய பையன் பிளாஸ்டிக் பாட்டில்ல பார்க்கிறான். இனி வர்ற காலத்துல தண்ணிய பார்கிறதே கேள்விக்குறி ஆகிரும் போல.

இதில் இருந்து மீண்டு வர வழியே இல்லையா அப்பா.

மழை பெய்யனும்ன்னா மலைகளும் மரங்களும் தேவை. மனிதன் மரங்களை வெட்டத் துவங்கி இயற்கை வளத்தை அழிக்கின்றான். அதுவே மழை பொய்ப்பதற்க்கு முக்கிய காரணம்.நாம் நிறைய மரங்களை நட்டாக வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும்..



காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




No comments:

Post a Comment