Monday, November 23, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 16

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


பொருள்:

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது.


கதை:

என்னங்க நாம இப்போ ஊருக்கு போய்தான் ஆகனும்மா? கவிதா சிறிது தயக்கத்துடன் கேட்டாள்.

Come on kavi, இப்போ இருக்குற Situation என்னனு உனக்கு நல்லா தெரியும்.

ஆனா நம்ம ஊருல போய் என்ன பண்ண போறோம்?. நீங்க Ac-யில் உட்கார்ந்து System - ல வேலை செஞ்சு பழகிட்டிங்க. அத பத்தி யோசிச்சு பார்த்தீங்களா?.

கையில கொஞ்சம் காசு இருக்கு. ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. கொஞ்ச நாள் சமாளிக்கலாம் என்றார் ரணசிங்கம்.

என்னதான் Foriegn ல இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வராதுல்ல என்றாள் கவிதா ஜன்னல் ஓரமாக Train இருந்து இயற்கையை ரசித்தபடி.

ம்ம்ம்.. யாரோ ஊருக்கு போகனும்மா கேட்டாங்க என்றார் தொண்டையை செருமியபடி.

ஊரில் இறங்கி சிறிது தூரம் நடந்ததும் ஊர் பெரியவர் ,"யாருப்பா ஊருக்கு புதுசா இருக்கு?" என்றார்.

நான் இந்த ஊர்க்காரன். நான் துபாய்க்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என் குடும்பத்துல எல்லோரும் வேற ஊருக்குப் போயிட்டாங்க. இப்ப நான் துபாயிலேருந்து திரும்பி வந்திருக்கேன். நானும் வேற ஊர்ல செட்டில் ஆகியிருக்கலாம். இங்க எனக்குக் கொஞ்சம் நெலம் இருக்கறதுனால அதுல தோட்டம் போட்டு ஏதாவது பயிர் செய்யலாம்னு பாக்கறேன்.

"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கெணறு இருக்கு. அதுங்கள்ள ஆழத்துல தண்ணி இருக்கு. அதுல தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. இந்த ஊர்ல இருக்கறவங்க கொஞ்சம் பேரும் வேற போக்கிடம் இல்லாமதான் இங்க இருக்காங்க.  பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செஞ்சுக்கிட்டு பொழைப்பை நடத்திக்கிட்டிருக்காங்க. இந்த ஊர்ல வந்து தோட்டம் போடப் போறேங்கறியே!" என்று விலாவாரியாகப் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் ரணசிங்கம்.

"நீங்களே சொல்றீங்க இல்ல, அடில தண்ணி இருக்குன்னு? நிலத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருக்கும்னும் சொல்றீங்க! அப்படின்னா ஒரு தடவை போர் போட்டா தண்ணி எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லே? 

அப்படிச் செஞ்சா, இந்த ஊரே மாறிடும். இன்னும் ஒரு வருஷம் கழிச்சுப் பாருங்க இந்த ஊரு எப்படி இருக்கப் போவுதுன்னு!" என்று சொல்லி விடை பெற்றான் ரணசிங்கம்.

'ம்ம். நீ துபாயில சம்பாதிச்சதையெல்லாம் தண்ணியில விடணும்னு விதி இருந்தா அதை யார் தடுக்க முடியும்?' என்று சொல்லிக் கொண்டார் பெரியவர்.

அடுத்த சில நாட்களில் ரணசிங்கம் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கினான். முதலில் போர் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ஆட்களும் வந்து சேர்ந்தனர். 

அடுத்த நாளே பம்ப்செட்டை நிறுவிக் குழாய்களை அமைத்துத் தற்காலிக மின்சார இணைப்பில் மோட்டாரை இயங்கச் செய்தான். குழாயிலிருந்து தண்ணிர் கொட்டியது. சில நிமிடங்களிலேயே தண்ணிர் நின்று விட்டது. மறுபடியும் மோட்டார் போட்ட போது தண்ணீர் வரவில்லை..

"தம்பி, மழை பெஞ்சாத்தான் தண்ணி! மழை பெய்யாத ஊரில இது மாதிரி முயற்சி எல்லாம் வேணாம்னு நான் அப்பவே சொன்னேன். எங்களுக்குத் தெரியாத விவசாயம் நீ செஞ்சுட போறியா?. விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது. இந்த மட்டோடு விட்டுட்டு வேறு வேலையை பாரு?" என்றார் ஊர்ப் பெரியவர்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



No comments:

Post a Comment