Thursday, October 29, 2020

Vehicles தூய தமிழ் வார்த்தை

Vehicles தூய தமிழ் வார்த்தை - ஆண்டிப்பட்டி தாத்தாவும் ஆங்கிலம் பேசும் பேரனும் || episode 1


கதை:

அருள்..அருள்..

மம்மி...I am here...

ஓ... நீ இங்க இருக்கியா... உங்க தாத்தா ஆண்டிப்பட்டியில இருந்து வர்றாங்க...

You mean grandpa....

ஆமா..ஆமா...

Okay..np..Where i have to pick up?...

நீ கொஞ்சம் பேருந்து நிலையம் வர போய் அவங்களை கூட்டிட்டு வா...... 

Mom...எனக்கு புரியுற மாதிரி சொல்லுங்க...

அச்சோ... உன்னைய english medium la சேர்த்துவிட்டது தப்பா போச்சு... உங்க ஸ்கூல்ல டீச்சர் என்னதான் உனக்கு சொல்லிக் தர்றாங்களோ.. இப்போ பாரு தமிழே உனக்குத் தெரியலை.

Mom..I know tamil...Don't blame me and my school... எங்க Schoolல்ல tamilல நான் தான் First mark... but, நீங்க பேசுறது தான் என்ன Language ன்னு தெரியலை...

டேய் நானும் உன்கிட்ட தமிழ்ல தாண்டா பேசுறேன். தாத்தாவை பஸ் ஸ்டாப் க்கு போய் பிக் அப் பன்னிக்க சொன்னேன்.

Yeah... now i got it.நீங்க First bus stop ன்னு சொல்லி இருக்கலாம்.. Starting you told something Different.

Mmmmm.... பேருந்து நிலையம்...

Yeah yeah... the same... intha mathiri difficult words la use பண்ணுறீங்க.

டேய் அதுதாண்டா தூய தமிழ்...

I see.... okay..Na Grandpa va pick up panna poren.

டேய் மிதிவண்டி இல்லாட்டி துள்ளுந்து எடுத்துட்டு போ...

மம்மி பிளீஸ்... Enaku puriyura mathiri solu....

சைக்கிள் or ஸ்கூட்டர் எடுத்துட்டு போன்னு சொன்னேன்.

Motobike ல போய்ட்டு வரேன் மம்மி...

உந்துருளி உனக்கு இன்னும் சரியா ஓட்டத் தெரியாதுடா... நான்

சொல்லுறத கேளு.

ம்ம்ம்.... Okay என்று சொல்லும் போது வாசலில் பேச்சுக்குரல் கேட்டது..

Amma grandpa auto la vanthutanga...

Autoன்னு சொல்லக் கூடாது. அதை மூவுருளி உந்து ன்னு தான் சொல்லனும்..

வாங்க அப்பா... எப்படி இருக்கீங்க. 

நான் நலமாக உள்ளேன். நீ நலமா.. 

மாப்பிள்ளை எங்கே...

அவங்க வேலைக்கு போய் இருக்காங்க.

பிரயானம் எல்லாம் சவுக்கியமா இருந்துச்சா..

ஊரில் இருந்து தொடருந்துல தான் வந்தேன். அங்க இருந்து  மூவுருளி உந்து லயே நம்ம வீட்டுக்கு வந்துட்டேன்.

மூவுருளி உந்து ல காசு கூட கேட்பாங்கப்பா.. நீங்க மகிழுந்து  லயே வந்து இருக்கலாம்...

நீங்க என்ன பேசுறீங்கன்னு எனக்கு புரியலை..

மூவுருளி உந்துன்னா Autoதொடருந்துன்னா Train. மகிழுந்துன்னா கார் டா.

யாரும்மா இந்த பையன்.

இவன்தான்ப்பா உங்க பேரன்..

அருள்மொழிவர்மனா இது... அவன் பிறந்த பொழுது பார்த்தது. அதன் பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன்...

ஆமாப்பா...

அருள்மொழிவர்மா இங்க வாங்க.....

Grandpa என்னைய அருள் ன்னு கூப்பிடுங்க. Full name சொல்லாதீங்க...

அவன் எப்பொழுதும் அப்படித்தான் அப்பா. நீங்கள் சென்று நீராடி விட்டு வாருங்கள். நான் தங்களுக்கு சிற்றுண்டி தயார் செய்கிறேன்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




திருக்குறள் கதைகள் - குறள் 14

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 14:

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.


பொருள்:

உழவர்கள் வருவாய் ஈட்ட உதவும்  மழை வளம் குறைந்து விட்டால், உழவர்கள் தங்கள் உழவுத் தொழிலைக் கைவிட்டு விடுவார்கள்.


கதை:

கோவிந்தன் இப்போதெல்லாம் அதிகம் பார்ப்பது வானத்தைத்தான். வீட்டுக்கு வராத பிள்ளையை எதிர் நோக்கி ஒரு தாய் அடிக்கடி வாசலில் வந்து நின்று தெருக்கோடியைப் பார்ப்பது போல் அடிக்கடி வானத்தைப் பார்ப்பது கோவிந்தனுக்கு ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகி விட்டது.

"இப்படியே மானத்தைப் பாத்துக்கிட்டிருந்தீங்கன்னா தலையே மேல திரும்பிடப் போவுது!" என்று அவன் மனைவி அன்னம் சில சமயம் சொன்னாலும் அவனது கவலையில் அவளுக்கும் பங்கு உண்டு. மழை பெய்யாதது அவளையும்தானே பாதித்திருக்கிறது?

"டிவியில மழை வரும்னு ஏதாவது சொன்னாங்களா?" என்றான்  கோவிந்தன், என்ன பதில் வரும் என்று தெரிந்தும்.

"சொன்னாங்க. பம்பாயில கொட்டு கொட்டுன்னு கொட்டுதாம். ஆனா நம்ம ஊருக்கு வர இருந்த புயல் ஆந்திராவுக்குப் போயிடுச்சாம்!" என்றாள் அன்னம் ஆற்றாமையுடன்.

மழை பொய்ப்பது இது தொடர்ந்து மூன்றாவது ஆண்டு. விவசாயத்தையே நம்பி இருக்கும் அவனைப் போன்றவர்களுக்கு வானம் பொய்த்து விட்டால் வாழ்க்கையே இல்லையே!

"சாப்பிட வாங்க" என்று மனைவி அழைத்தாள்.

நானே வயலில் உழுது, பயிர் செய்து, அறுவடை செய்த நெல்லில் பெரும்பகுதியை விற்று விட்டு, நமக்கென்று வைத்துக்கொண்ட நெல்லைக் குதிரில் சேமித்து அவ்வப்போது அரிசி மில்லில் அரைத்து அந்த அரிசியில் உண்ட காலம் போய், இப்போ டவுனுக்குப் போய் அரிசிக்கடையில் அரிசி வாங்கி, பேருந்தில் ஊருக்குக் கொண்டு வந்து அந்த அரிசியில் உணவு சமைத்துச் சாப்பிடும் கொடுமை வந்துவிட்டது. இதை நினைக்கும் போது கவலையாக இருக்கிறது. எனக்கு சாப்பாடு வேண்டாம் அன்னம்.

"உங்களுக்கு ஏன் இவ்வளவு பிடிவாதம்? நெலத்தைத்தான் ரியல் எஸ்டேட்காரங்க நல்ல வெலைக்குக் கேக்கிறாங்களே? பேசாம நெலத்தை வித்துட்டுப் பணத்தை பாங்கில போட்டுட்டு வர வட்டியில நம்ம ரெண்டு பேரும் காலத்தை ஓட்ட முடியாதா? பையன் வேற கொஞ்சம் பணம் அனுப்பறான் என்றாள் அன்னம்.

"உழவன் நெலத்தை வித்துட்டு வட்டிப் பணத்துல சாப்பிடறதுன்னு ஆரம்பிச்சா உலகம் என்னத்துக்கு ஆகும்?"

"ஆமாம்! நீங்க ஒத்தர்தான் உழவரா? நம்ம ஊரிலேயே வெவசாயம் பண்ணறவங்க எவ்வளவோ பேரு நெலத்தை வித்துட்டு நிம்மதியா இருக்காங்க!"

கோவிந்தன் பேசாமல் இருந்தான்.

மறுநாள் காலை தான் சென்று ரியல் எஸ்டேட்காரங்க பார்க்கப் போறேன்.

எதுக்குங்க?

நல்லா யோசிச்சு பார்த்தேன் அன்னம். நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

அதான் " அந்த ரியல் எஸ்டேட்காரங்க வந்தா நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்." என்றார்.

அன்னம் நம்ப முடியாமல் தன் கணவனைப் பார்த்தாள்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



திருக்குறள் கதைகள் - குறள் 13

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 13:

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


பொருள்:

நீர் சூழ்ந்த உலகம் இது  என்றாலும், வானம் பொய்த்து விட்டால், உலகின் உள்ளிருந்து பசிக்கொடுமை (மக்களை) வாட்டும்.


கதை:

அப்பா! அப்பா! என்று ஹரி அழைத்தான்.

என்னப்பா? என்று கேட்டார் அழகேஷன்.

அப்பா எங்க ஸ்கூல்ல நாளைக்கு பேச்சுப் போட்டி இருக்குப்ப. அதுக்கு நானும் பேரு கொடுத்து இருக்கேன் அப்பா. 

நல்ல விசயம் ஹரி. தலைப்பு என்ன?.

தலைப்பு 'மழை' அப்பா.

அருமையான தலைப்பு. 

ஆனால் அப்பா எனக்கு மழை பற்றி அவ்வளவா தெரியாது. நீங்க கொஞ்சம் சொன்னா நான் competition க்கு Prepare பன்ன வசதியா இருக்கும்.

இவ்வளவு தானா? சரி நீ போய் Refresh ஆகிட்டு வா. நம்ம வெளிய போகலாம்.

Okay அப்பா..

After 10 min

அப்பா நாம எங்க போறோம்.

Beach க்கு போறோம்.

ஹய்யா ஜாலி ஜாலி...

Kids playing...

வீட்டுக்குப் போவோமா...

சரிப்பா..

இப்போ நீ பாத்தியே கடல். அந்த இடம் எப்படி இருக்கு ஹரி.

ம்ம்ம்... ஒரு பக்கம் முடிவே இல்லாத கடல். இன்னோரு பக்கம் நிலம்.

கரெக்ட். அதே மாதிரி தான் இந்தியாவும் முன்று பக்கம் நீரால், ஒருபக்கம் நிலத்தால் ஆனது.

எனக்கு இது தெரியும் அப்பா. எங்க ஸ்கூல்ல மிஸ் இது பத்தி சொல்லி இருக்காங்க.

அப்போ உலகத்தில்  நீர் விழுக்காடு தான் அதிகம்ன்னு உனக்கு நல்லாவே தெரியும்ன்னு நினைக்குறேன்.

ஆமாப்பா...மிஸ் சொன்னாங்க.

வெரி குட். ஹரி எவ்வளவு தான் நீரின் அளவு அதிகமா இருந்தாலும் மழை இல்லாட்டி உலகம் முழுவதும் பசியால் வாடும்.

அப்பா நீங்க சொல்லுறது புரிஞ்ச மாதிரியும் இருக்கு... புரியாத மாதிரியும் இருக்கு....

ஹரி மழை பெய்தால் தான் அணைகள் நிறையும். ஆறுகளில் தண்ணீர் வரும். விவசாயம் பண்ண முடியும். 

மழை பெய்யாட்டி விவசாயம் பண்ண முடியாது. விவசாயம் பண்ணலைன்னா மக்கள் யாரும் சாப்பிட முடியாது.

ஆனா அப்பா மழை எப்படி பெய்யாமல் போகும்.

மழை பெய்யாமல் போறதுக்கு மனிதன் தான் காரணம்.

என்னப்பா சொல்லுறீங்க?.

ஆமாப்பா.. நம் முன்னோர்கள் காலத்தில் மாதம் மும்மாரி பெய்தது. ஆறுகள், குளங்கள், ஏரிகள், கண்மாய்கள்ன்னு அனைத்தும் நிரம்பி வழிந்தது.நாடும் பச்சை பசேல் என செழிப்பாக இருந்தது.

எங்க அப்பா காலத்துல தண்ணிய ஆறு, குளத்துல பாத்தாங்க. நான் கிணத்துல பார்த்தேன். என்னுடைய பையன் பிளாஸ்டிக் பாட்டில்ல பார்க்கிறான். இனி வர்ற காலத்துல தண்ணிய பார்கிறதே கேள்விக்குறி ஆகிரும் போல.

இதில் இருந்து மீண்டு வர வழியே இல்லையா அப்பா.

மழை பெய்யனும்ன்னா மலைகளும் மரங்களும் தேவை. மனிதன் மரங்களை வெட்டத் துவங்கி இயற்கை வளத்தை அழிக்கின்றான். அதுவே மழை பொய்ப்பதற்க்கு முக்கிய காரணம்.நாம் நிறைய மரங்களை நட்டாக வேண்டும். மழை நீரை சேமிக்க வேண்டும்..



காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




Friday, October 23, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 12

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 12:

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


பொருள்:

உண்பவர்களுக்கு உணவுப் பொருட்களை விளைவித்துத் தருவதோடு, அவர்களுக்குத் தானே உணவாகவும் ஆகிறது மழை.


கதை:

ஆஹா.. அம்மா இந்த இடம் எவ்வளவு அழகா இருக்கு...

ஆமாப்பா... 

அம்மா மழை தான் மரங்களின் வளர்ச்சிக்கும் காரணமா?

ஆமாண்டா அமுதன். மழை பெய்வதனால் தான் தானியங்கள் விளைகின்றன. மேலும் மழை நீரே ஆறாகவும், ஊற்றாகவும் அமைந்து ஊருணியும் நிறைந்து உணவாகவும் மாறுகின்றது.

சுருக்கமா சொல்லனும் அப்படின்னா உயிர்களின் தோற்றத்திற்கும், அதன் வளர்ச்சிக்கும் மழைதான் காரணம்.

ஓ...

குறிப்பாக சொல்லனும்ன்னா மழை நீரே உணவாகவும் அமைகின்றது.

மழைநீர் உணவாக அமையுதா... அது எப்படி அம்மா...

நம்ம வீட்ல சாப்பாடு இருக்குடா அமுதன். அதுனால சாப்பிடுறோம். 

ஆனா அந்த சாப்பாடு கூடாத கிடைக்காதவங்க நிறைய பேர் இருக்காங்கப்பா. அவுங்களுக்கு தண்ணீர் தான் உணவே...

ரொம்ப பாவம்ல அம்மா அவங்க எல்லாம்..

ஆமாப்பா.. அதுனால தான் நீ சாப்பாட வேஸ்ட் பண்ணும் போது அம்மா உன்கிட்ட கோவிச்சுக்குவேன்.

சாரி அம்மா... இனிமேல் நான் சாப்பாட வேஸ்ட் பண்ண மாட்டேன்.

இந்த மழையின் சிறப்பைத் தான் திருவள்ளுவர், திருக்குறள்ல "துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை", ன்னு சொல்லி இருக்காங்க.

காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Thursday, October 22, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 11

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 11:

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


பொருள்:

உலகத்தில் உள்ள உயிர்களை எல்லாம் வாழ வைப்பதால், மழையை அமிர்தம் என்றே கருத வேண்டும். 


கதை:

ஐயோ...இந்த மழை ஏன் தான் வருதோ தெரியலை... அமுதன் வருத்தப்பட.

அமுதா அப்படி சொல்லக்கூடாது என்று அவனது தாய் கூறினால்.

ஆனால் அம்மா, இந்த மழை என்னோட யூனிபார்ம் டிரஸ், Shoes, books, எல்லாத்தையும் நனைச்சிடுச்சு.

சரியா போச்சு... உனக்கு ஸ்கூல்ல உங்க மிஸ் மழை பத்தியெல்லாம் சொல்லிக் கொடுக்கலையா...

மழையை பற்றி தெரிஞ்சுக்க என்ன இருக்குது....

நான் நினைச்சது சரிதான். உனக்கு மழையை பற்றி நான் தான் கிளாஸ் எடுக்கனும்...

நீ படிக்குற ஸ்கூல்ல தமிழ் Subject இருக்குல்ல....

ஆமா,ஆமா, இருக்கு...

அதுல திருக்குறள் உண்டா...

அய்யோ..அம்மா தப்பித்தவறி திருக்குறள் மட்டும் சொல்லிடாத...

அத மனப்பாட பகுதின்னு வச்சு Exam-ல கொலையா கொல்லுறாங்க.

இதுலாம் போதாதுன்னு திருக்குறள் Competition வச்சு Price கொடுக்குறாங்க.... 

கண்ணா திருக்குறள் நீ நினைக்குற மாதிரி கஷ்டம் இல்லைப்பா.. அதுல திருவள்ளுவர் என்ன சொல்லுறாங்கன்னு புரிஞ்சுக்கிட்டா Easy தான்...

சொல்லுங்க..கேட்குறேன்...

மனிதன் வாழ அத்தியாவசியமானது எது?

உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம்...

நீ சாப்பிடும் போது விக்கல் வந்தா என்ன பண்ணுவ?

தண்ணி குடிப்பேன்.

அந்த தண்ணீர் எங்க இருந்து வருது?..

பூமிக்கு அடியில் இருந்து...

அந்த பூமிக்கு அடியில தண்ணீர் எப்படி போச்சு....

அது வந்தும்மா......

சரி மழை அப்படின்னா என்ன?.

ம்ம்ம்... வானத்துல இருந்து பூமிக்கு வர்ற தண்ணீர் தான் மழை..

இப்போ புரியுதா.. பூமிக்கு அடியில தண்ணீர் எப்படி போச்சுன்னு...

ம்ம்ம்ம்...

மழைன்னா தண்ணீர். தண்ணீர் யாருக்கு எல்லாம் தேவை..

ம்ம்ம்ம்.... எல்லா உயிரினமும் உயிர் வாழ தண்ணீர் தேவை.

ஆமாப்பா.... அதே மாதிரி பூமியில விழுகுற தண்ணீர் பூமியின் சூட்டு நிலையை சமப்படுத்துகின்றது....

ஓ.... இவ்வளவு நன்மைகள் இருக்குதா மழையில்...

ஆமாம் அமுதா... மழை இல்லாவிட்டால் மக்கள் இல்லை....

அதுனால தான் திருவள்ளுவர் வான் சிறப்பு அதிகாரத்தில் முதல் திருக்குறள்ல மழையை அமிர்தம்ன்னு சொல்லி இருக்காங்க ..... 

இப்போதாம்மா எனக்கு அந்த திருக்குறள் புரியுது....

இது மாதிரி மழையை பற்றி நிறைய இருக்கு அமுதா...  டெய்லி ஒண்ணு ஒண்ணா சொல்லுறேன்....


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.