Friday, November 27, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 17

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 17:

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.


பொருள்:

கடலிலிருந்து நீரை எடுத்துகொண்ட மேகம் அந்த நீரை மழையாகப் பெய்யாமல் போனால், பரந்த கடல் கூடத் தன் நீர் வளத்தை இழந்து விடும்.


கதை:

ராஜ் உனக்கு இந்த ஊர் பிடிச்சு இருக்குதா?.

ரொம்ப பிடிச்சு இருக்கு டாடி.

ஸ்கூல்லாம் எப்படி இருக்கு?

டாடி, இங்க ஸ்கூல் Couching different ஆ இருக்கு. போக போக Set ஆகிடும்னு நினைக்குறேன்.

Very good. Miss class எப்படி எடுக்குறாங்க.

ரொம்ப பிடிச்சுருக்கு டாடி. இன்னிக்குக் கிளாசுலே மழை எப்படிப் பெய்யுதுன்னு சொல்லிக் கொடுத்தாங்க" என்றான் ராஜ்.

"Interesting, உனக்கு புரிஞ்சது சொல்லு. பார்ப்போம்." என்றார் மகனிடம், ஆவலை வெளிக்காட்டி.

"வெய்யில் அடிக்குது இல்ல, அந்த சூட்டுல கடல் தண்ணி எல்லாம் ஆவியாகி மேல போயி மேகமா மாறிடும். அந்த மேகம்தான் மழையாப் பெய்யுது" என்று விளக்கினான் ராஜ்.

"வெரி குட்" என்று மகனை வாரி அணைத்துக் கொண்டார் ரணசிங்கம்.

"ஆமாம் நான் ஒரு கேள்வி கேக்கறேன், பதில் சொல்லுவியா?" என்றார் ரணசிங்கம்.

"Of course dad", என்றான் ராஜ்.

"கடலிலே இருந்து நெறையத் தண்ணி ஆவியாப் போயிடுது இல்ல, ஆனா கடல்ல தண்ணி கொறையறதே இல்லையே அது ஏன்?" ரணசிங்கம்.

"ஏன்னா அந்தத் தண்ணி எல்லாம்தான் மழையா கடலுக்கே திரும்பி வந்துடுதே!" என்றான் ராஜ்.

"வெரி குட்" என்றார் ரணசிங்கம்.

"But dad, எனக்கு ஒரு டவுட். ஒரு வேளை ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையா மாறாம அப்படியே மேகமா ஆகாயத்துலேயே இருந்துட்டா என்ன ஆகும்?"

"அப்படி ஆவியாப் போன தண்ணியெல்லாம் மழையாத் திரும்பி வரலேன்னா கடல்ல தண்ணி குறைஞ்சு, கடைசில கடலே  வத்திப் போனாலும் போயிடும்" என்றான் ரணசிங்கம்.

"அப்படி நடந்துடும்மா டாடி" என்றான் ராஜ்.

"நடக்காது. கவலைப் படாதே. ஆனா நாம ஒண்ணு புரிஞ்சுக்கணும். உலகத்தில எல்லாமே  போயிட்டுப் போயிட்டுத் திரும்பி வரணும். அப்பதான் உலகம் இயங்கும் என்றார் ரணசிங்கம் ஏதோ யோசனையுடன்".

ஒரு வருடங்களுக்கு பிறகு ஊர் பெரியவர் ரணசிங்கத்தின் வயல் பக்கம் சென்ற போது வயல் முழுவதும் பசுமையாக இருந்ததையும் அங்கு சிலர் வேலை செய்ததையும் கண்டு. ஆச்சரியம் அடைந்தார்.

பலே.. சொன்னத செய்துட்டியே. எப்படிப்பா இது சாத்தியம்?.

"ஐயா, ஒருநாள் என் பையன்கிட்ட பேசும் போது தான் எனக்கு ஒன்னு தோனுச்சு. எப்படி கடல் தண்ணீர் மழையா மாறி மறுபடியும் கடல்ல சேருது. அதே மாதிரி தான் நம்ம நிலத்தடி நீர் எடுக்குறோம். ஆனால் மறுபடியும் நிலத்துக்கு கொடுக்குறோம்மா தோணுச்சு.உடனே அதுக்கு என்ன பன்றதுன்னு தேடுனேன். அப்ப தான் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த மழைநீர் சேகரிப்பு பற்றி படிச்சேன். என்னோட வீட்லயும்  மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைச்சேன். அதோட என்னோட வயல்ல இருந்த மண்னை வேளாண்மை கூட்டுறவு சங்கம் அமைத்த ஆய்வு கூடத்தில் பரிசோதனைக்கு கொடுத்தேன்.ஆறு மாதத்தில் நிலத்தடி நீர் மட்டம் கொஞ்சம் உயர்ந்தது. தற்காலிகமா இயற்கை உரங்கள் பயன்படுத்தி தோட்டம் போட்டு பார்த்தோம். அதுதான் நீங்க இப்போ பார்க்குறீங்க.

படிச்சவன் படிச்சவன் தான். நீ சாதிச்சிட்ட தம்பி. நம்ம ஊர்ல இருக்குற எல்லார்கிட்டயும் இத சொல்லுறேன். அவுங்களுக்கும் நீ தான் வழிகாட்டனும்.

கண்டிப்பா என்னால முடிஞ்ச உதவி செய்றேன்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Monday, November 23, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 16

 திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 16:

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


பொருள்:

விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது.


கதை:

என்னங்க நாம இப்போ ஊருக்கு போய்தான் ஆகனும்மா? கவிதா சிறிது தயக்கத்துடன் கேட்டாள்.

Come on kavi, இப்போ இருக்குற Situation என்னனு உனக்கு நல்லா தெரியும்.

ஆனா நம்ம ஊருல போய் என்ன பண்ண போறோம்?. நீங்க Ac-யில் உட்கார்ந்து System - ல வேலை செஞ்சு பழகிட்டிங்க. அத பத்தி யோசிச்சு பார்த்தீங்களா?.

கையில கொஞ்சம் காசு இருக்கு. ஊர்ல கொஞ்சம் நிலம் இருக்கு. கொஞ்ச நாள் சமாளிக்கலாம் என்றார் ரணசிங்கம்.

என்னதான் Foriegn ல இருந்தாலும் நம்ம ஊர் மாதிரி வராதுல்ல என்றாள் கவிதா ஜன்னல் ஓரமாக Train இருந்து இயற்கையை ரசித்தபடி.

ம்ம்ம்.. யாரோ ஊருக்கு போகனும்மா கேட்டாங்க என்றார் தொண்டையை செருமியபடி.

ஊரில் இறங்கி சிறிது தூரம் நடந்ததும் ஊர் பெரியவர் ,"யாருப்பா ஊருக்கு புதுசா இருக்கு?" என்றார்.

நான் இந்த ஊர்க்காரன். நான் துபாய்க்குப் போய்ச் சம்பாதிக்க ஆரம்பிச்சதும், என் குடும்பத்துல எல்லோரும் வேற ஊருக்குப் போயிட்டாங்க. இப்ப நான் துபாயிலேருந்து திரும்பி வந்திருக்கேன். நானும் வேற ஊர்ல செட்டில் ஆகியிருக்கலாம். இங்க எனக்குக் கொஞ்சம் நெலம் இருக்கறதுனால அதுல தோட்டம் போட்டு ஏதாவது பயிர் செய்யலாம்னு பாக்கறேன்.

"ஏம்ப்பா? இது மானம் பாத்த பூமி. இங்கே மழை பெய்யறதே அபூர்வம். முக்காவாசி பேரு இந்த ஊரை விட்டுப் போயிட்டாங்க. ஏதோ ஊர்ல ரெண்டு மூணு பொதுக்கெணறு இருக்கு. அதுங்கள்ள ஆழத்துல தண்ணி இருக்கு. அதுல தண்ணி ஊறிக்கிட்டு இருக்கு. இந்த ஊர்ல இருக்கறவங்க கொஞ்சம் பேரும் வேற போக்கிடம் இல்லாமதான் இங்க இருக்காங்க.  பக்கத்து டவுனுக்குப் போய் ஏதோ வேலை, வியாபாரம்னு செஞ்சுக்கிட்டு பொழைப்பை நடத்திக்கிட்டிருக்காங்க. இந்த ஊர்ல வந்து தோட்டம் போடப் போறேங்கறியே!" என்று விலாவாரியாகப் பேசியதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டான் ரணசிங்கம்.

"நீங்களே சொல்றீங்க இல்ல, அடில தண்ணி இருக்குன்னு? நிலத்துல தண்ணி ஊறிக்கிட்டே இருக்கும்னும் சொல்றீங்க! அப்படின்னா ஒரு தடவை போர் போட்டா தண்ணி எப்பவும் இருந்துக்கிட்டே இருக்கும் இல்லே? 

அப்படிச் செஞ்சா, இந்த ஊரே மாறிடும். இன்னும் ஒரு வருஷம் கழிச்சுப் பாருங்க இந்த ஊரு எப்படி இருக்கப் போவுதுன்னு!" என்று சொல்லி விடை பெற்றான் ரணசிங்கம்.

'ம்ம். நீ துபாயில சம்பாதிச்சதையெல்லாம் தண்ணியில விடணும்னு விதி இருந்தா அதை யார் தடுக்க முடியும்?' என்று சொல்லிக் கொண்டார் பெரியவர்.

அடுத்த சில நாட்களில் ரணசிங்கம் சுறுசுறுப்பாக வேலைகளைத் தொடங்கினான். முதலில் போர் இயந்திரம் பொருத்தப்பட்ட லாரியும், ஆட்களும் வந்து சேர்ந்தனர். 

அடுத்த நாளே பம்ப்செட்டை நிறுவிக் குழாய்களை அமைத்துத் தற்காலிக மின்சார இணைப்பில் மோட்டாரை இயங்கச் செய்தான். குழாயிலிருந்து தண்ணிர் கொட்டியது. சில நிமிடங்களிலேயே தண்ணிர் நின்று விட்டது. மறுபடியும் மோட்டார் போட்ட போது தண்ணீர் வரவில்லை..

"தம்பி, மழை பெஞ்சாத்தான் தண்ணி! மழை பெய்யாத ஊரில இது மாதிரி முயற்சி எல்லாம் வேணாம்னு நான் அப்பவே சொன்னேன். எங்களுக்குத் தெரியாத விவசாயம் நீ செஞ்சுட போறியா?. விண்ணிலிருந்து மழைத்துளி விழுந்தாலொழிய இந்த மண்ணில் ஒரு புல் கூட முளைக்காது. இந்த மட்டோடு விட்டுட்டு வேறு வேலையை பாரு?" என்றார் ஊர்ப் பெரியவர்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Monday, November 2, 2020

திருக்குறள் கதைகள் - குறள் 15

திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 15:

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


பொருள்:

பெய்யாமல் உலக மக்களின் வாழ்க்கையைக் கெடுப்பதும் மழைதான். மழை பொய்த்ததால் வளம் குன்றித் தவிக்கும் மக்களுக்கு ஆதரவாகப் பெய்வதும் மழைதான்!


கதை:

நல்லா யோசிச்சு பார்த்தேன் அன்னம். நிலத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்ய முடியாமல் இப்படிக் குற்ற உணர்ச்சியோடு அரிசி வாங்கிச் சாப்பிடுவதை விட, நிலத்தை விற்று விட்டால், அரிசி வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆகி விடுமே!

அதான் "அந்த ரியல் எஸ்டேட்காரங்க பார்த்து நிலத்தை விற்க சம்மதம்னு சொல்லிடப் போறேன்." என்றார்.

ம்ம்ம்.. நிலத்தை விற்குறதுக்கு முன்னாடி கடைசியா ஒரு தடவை நம்ம நிலத்தை பார்த்துட்டு வருவோம்ய்யா....

சரி போவோம்.. வா..

தரிசாக இருக்கும் நிலத்தை பார்த்து அன்னம் கவலை அடைந்தாள். 

என்னாச்சு பிள்ளை?,  நீதான் நிலத்தை விற்க சொன்ன.

என்னய்யா நீ, நான் மட்டும் சந்தோஷத்தோடவா நிலத்தை விற்க சொன்னேன்...  மூன்று வருஷமா மழை இல்ல. ஆத்துல தண்ணி இல்ல. பம்ப் செட் போட்டுப் பயிர் செய்யறத்துக்கும் நமக்கு வசதி இல்ல. வெவசாயமே இல்லேங்கறப்ப 'நிலத்தை இப்படி தரிசா போட்டு வச்சு இருக்கோம்' ன்னு தான் அப்படி சொன்னேன். இது எனக்கும் சாமிதான்யா. நம்ம பிள்ளைங்க கை குழந்தையா இருக்கும் போது எத்தனை முறை இந்த மரத்துல தொட்டி கட்டி தூங்க வச்சு இருக்கோம். 

இந்த இடத்துல எத்தனையோ நாள் நான் உனக்கு சாப்பாட என் கையால உருண்ட பிடிச்சு கொடுத்து இருக்கேன். அதுலாம் நினைக்கும் போது நான் மட்டும் எப்படி கவலைப்படாம இருக்க முடியும்.

சரியா போச்சு... இம்புட்டு கவலையை மனசுல வச்சுக்கிட்டுத்தான் நிலத்தை விற்க சொன்னியா என்கிட்ட.  நீ கவலைப்படுறத பார்த்தா மூன்று வருஷம் வராத மழையும் வந்துடும் போலயே...

யோவ் கிண்டலா பண்ணுற.. உன்னைய... என்று கூறிக்கொண்டே இருக்கும் போது வானம் இடியுடன் மழை கொட்டத் துவங்கியது.

என்ன மழையோ! மூன்னு வருஷமா பெய்யாம நம்மளை வாட்டி எடுத்துச்சு. இப்ப நல்லாப் பேஞ்சு நம்ம வயித்தில பாலை வாத்திருக்கு!. இன்னும் ரெண்டு நாள் இத மாதிரி மழை பெய்தால் நமக்கு கவலையில்லை என்று சந்தோஷத்தில் கூத்தாடினர் மாரிமுத்துவும் அன்னமும்..


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.