Friday, September 3, 2021

Vehicles தூயதமிழில் part2

 அருள் அருள்...


Mummy i'm here. Why are you calling me?


சீக்ரம் கிளம்பு. நம்ம எல்லாரும் Evening picnic போவோம்.


Mom.. really.... நீங்களா picnic போவோம் சொல்லுறீங்க. I can't believe it.


ஆமாண்டா கண்ணா. நான் தான் சொல்லுறேன். உங்க தாத்தா ஊருல இருந்து வந்து இருக்காங்க இல்லையா. அதான் Picnic porom.


என்னம்மா? மகிழ் உலா போறோம்ன்னு சொல்லிட்டியா என் பேரன்கிட்ட.


மகிழ் உலா? What's it mom... ஏதாச்சும் New picnic spot ah?


டேய் கண்ணா Picnic க்கு தமிழில் மகிழ் உலா / உல்லாச பயணம் சொல்லுவாங்க. அதுதான் உங்க தாத்தா உன் கிட்ட கேட்குறாங்க. நீயும் வர்றியான்னு?


Grandpa... yes yes. I'm coming. I like to go picnic.


Mom picnic la boating polam ma.


படகு, நாவாய் la ஆபத்தானது. அதுலாம் நீ இன்னும் பெரிய பையன் ஆனதும் போகலாம்.


டேய்.. திருதிருன்னு முழிப்பியே.. boat na tamil la படகு. ship na tamil la நாவாய். அதுதான் தாத்தா சொல்லுறாங்க. 


எனக்கு புரிஞ்சுடுச்சு. Just thinking Mom.


என்ன Thinking?.


Nothing mom. நம்ம Picnic எதுல போறோம்ன்னு நீங்க சொல்லவே இல்லையே? 


அதுவா? எப்பவும் போல கூடுந்து/Van-ல போலாம்ன்னு உங்க அப்பாகிட்ட கேட்டேன்.


You mean van mom....


ஆமாண்டா.... நம்ம நாலு பேர்தான போறோம். நீ என்னமோ ஊரையே கூட்டிட்டு போற மாதிரி Lorry (சுமையுந்து)ல போவோம் van (கூடுந்து)ல போவோம்ன்னு சொல்லுற. அதுலலாம் போகல. நம்ம Jeep la யே போவோம் கிளம்பி இருங்கனு சொல்லிட்டு போயிட்டார்.


மாப்பிள்ளை சொன்னது தான் சரி. நம்ம நாலு பேருக்கு வல்லுந்து போதும்.


ம்ம்ம்.... வல்லுந்து, கூடுந்து என்ன பேசுறீங்கன்னே புரியலை.


டேய்... வல்லுந்துன்னா Jeep. கூடுந்துன்னா Van டா.


Oh...... okay mom..


அருள்மொழிவர்மா......


Grandpa என்னை அப்படி கூப்பிடாதீங்க சொன்னேன்ல.


கோபப்படாத பேரா....நம்ம நாட்டின் தாய்மொழி தமிழ்... இன்னைக்கு தூயதமிழில் பேசுனாலே உன்னைய மாதிரி பாதி பேருக்கு புரியுறது இல்லை. அப்படின்னா என்னன்னு கேட்குறீங்க. இது உன்னோட தப்பு இல்லை. தூயதமிழை முறையாக கற்பிக்க தவறிய என் போன்ற பெரியவர்கள் செய்த தவறு. நாங்கள் பேசும் போதும், எழுதும் போதும் தூயதமிழை பயன்படுத்தாமல் பேச்சுவழக்கில் பேசிய வார்த்தைகள் எல்லாம் இன்று தமிழ் வார்த்தைகளாகி போய் தூயதமிழ் காணாமல் போய்விட்டது. அதுதான் உன்போன்ற இன்றைய பிள்ளைகளுக்கு தமிழ் தெரியவில்லை. 


I'm sorry grandpa....


இதில் உன் தவறு எதுவும் இல்லை. தமிழை முறையாக கற்பிக்க வேண்டியது என் போன்ற பெரியவர்கள் கடமை. அழிந்து கொண்டு இருக்கும் தமிழை முடிந்த மட்டுமாவது காப்போம் வளர்ப்போம் னு தான் தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜசோழனின் இயற்பெயரான அருள்மொழிவர்மன் ங்குற பெயரை உனக்கு நான் தான் வச்சேன்.

உனக்கு பிடிக்கலைன்னா நான் அப்படி கூப்பிடக்கூடாதுன்னா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம்.


What..... ஒப்பந்தம் Means? Agreement ஆ


Grandpa what ஒப்பந்தம்?


Hmmm... நீ தூயதமிழ் கத்துக்கனும்.


Okay. Its very easy....


சரி கிளம்புங்க. வெளிய போகலாம்....


Ambulance Crossing... 


தாத்தா Ambulence na தமிழில் என்ன?


Ambulance - ஆம்புலன்ஸ் - திரிவூர்தி


Oh.. okay.... stop...stop...


என்னடா ஆச்சு?... 


Daddy see airport வந்துட்டோம்.... 


ஓ.... வானூர்த்தி நிலையம்/ பறப்பகம் ஆ...


Helicopter, Aeroplane லாம் போகும் Daddy. பார்த்துட்டு போவோம்.... please please...


Grandpa aeroplane, helicopter க்கு தமிழில் என்ன சொல்லுங்க?


Aeroplane - விமானம் - வானூர்தி

Helicopter - ஹெலிகாப்டர் - உலங்கு வானூர்தி.


வானூர்தி, உலங்கு வானூர்தி.... வானூர்தி, உலங்கு வானூர்தி....


All laughing....


Fighter Jet க்கு என்னன்னு நீ கேட்கலையே....

Yes....yes..... மறந்துட்டேன் Daddy...


Fighter Jet - போர் விமானம் - போர் வானூர்தி


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.



Thursday, June 10, 2021

திருக்குறள் கதைகள் - குறள் 19

  திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 19:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்


பொருள்:

மழை பெய்யாவிட்டால் இந்தப் பரந்த உலகத்தில் தானம், தவம் என்ற இரண்டுமே இல்லாமல் போய் விடும்.


கதை:

ஊர் பஞ்சாயத்துல கூடி பேசி இந்த வருஷ ஊர் திருவிழா வேண்டாம்னு முடிவு எடுத்துட்டாங்க.

ஆமா!ஆமா, ரொம்ப நல்ல முடிவு தான். ஆனால் சுந்தரலிங்கம் தான் பாவம். ஒவ்வொரு வருடமும் ஊர்திருவிழாக்கு ஊர் முழுவதற்கும் அன்னதானம் செய்வார்.

சுந்தரலிங்கம் ரொம்ப நல்ல மனுஷன். தவ,தானம்ன்னு வாழ்க்கை வாழ்பவர் ஆச்சே. இந்த வருஷம் என்ன செய்ய போறார்?.

தெரியலையே....ஊரில் இருக்குற வசதி படைத்தவர்கள் கூட அவர் செய்யும் அன்னதானத்தில் கலந்து கொள்வார்கள். 

ம்ம்ம்.... பொறுத்து இருந்து என்ன செய்ய போகிறார்ன்னு பார்ப்போம்.

இப்படி ஒரு சோதனை வரும்ன்னு நான் எதிர்பார்க்கலை ராணி.

"நம் ஊரில் தொடர்ந்து மூன்று வருடங்களாக மழை இல்லை. விவசாயம் இல்லை. வியாபாரம் இல்லை. எல்லோரும் எப்படியோ வயிற்றையும் வாயையும் கட்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்."

"ராணி, இது போன்ற சமயங்களில் தானே அன்னதானம் அவசியம்?"

"சரிதான்ங்க. ஆனால் நாம் ஒன்றும் குபேரர் இல்லை. நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். ஒரு சிறிய விவசாய குடும்பம். எப்போதும் செய்யும் அன்னதானமே நம் வசதிக்கு மீறியதுதான். ஆனால் இத்தனை வருஷம் நீங்க இதை ஒரளவு கஷ்டப்பட்டுச் செய்து வந்திருக்கிறார். மழை பொய்த்து வாழ்க்கையே சுமையாகிப் போன நிலையில், கடந்த இரண்டு வருடங்களாக நம்ம இந்த அன்னதானத்தை நடத்தியதே பெரிய விஷயம். இந்த வருடம் நிச்சயமாக நம்மால் நடத்த முடியாதுன்னு அந்த கடவுளுக்கே தெரிஞ்சுடுச்சு போல. அதான் ஊர் திருவிழா வேண்டான்னு நிறுத்தி இருக்கு. அடுத்த வருஷம் ஜமாய்ச்சுடலாம். கவலைப்படாதீங்க."

"ராணி, இது போன்ற விஷயங்கள் ஒருமுறை தடைப்பட்டால் மீண்டும் அவற்றைத் தொடர்வது கஷ்டம். ஒருமுறை தடைப்பட்ட  உறுத்தல் ஆயுள் முழுவதும் இருந்து கொண்டே இருக்கும். அதை விட ஏதோ ஒரு காரணத்தைக் கற்பித்து ஒரேயடியாக நிறுத்தி விட்டால் நிம்மதியாக இருக்கும். ஒரு காசு செலவில்லாமல் நான் செய்து கொண்டு வந்த சில அனுஷ்டானங்களையே  நிறுத்தி விட்டேனே நான்!"என்றார் சுந்தரலிங்கம்.

"என்ன சொல்லுறீங்க. நிறுத்தி விட்டீர்களா? நான் கவனிக்கவே இல்லையே?" என்றாள் ராணி வியப்புடன்.

"நான் நிறுத்தியது அதிகாலையில் செய்யும் அனுஷ்டானங்களை. நான் செய்ததையும் நீ பார்த்திருக்க மாட்டாய், நிறுத்தியதையும் பார்த்திருக்க மாட்டாய்!"

"ஏன் நிறுத்தினீர்கள்?"

"முன்பெல்லாம் அதிகாலையில் எழுந்து ஆற்றுக்குப் போய்க் குளித்து விட்டு அங்கேயே என் அனுஷ்டானங்களைச் செய்து விட்டு வருவேன். மழை பெய்யாததால் ஆற்றில் நீர் இல்லாமல் போனதும், நம் வீட்டுக் கிணற்றிலிருந்து தண்ணீர் இழுத்துக் குளித்து வீட்டு வீட்டிலேயே அனுஷ்டானங்களைச் செய்ய ஆரம்பித்தேன். பிறகு கிணற்று நீர் மிகவும் கீழே போனதும், தண்ணீர் இழுப்பதே கஷ்டமாக இருந்தது. சில சமயம் 'இன்று ஒருநாள் செய்யாவிட்டால் என்ன?' என்று தோன்றும். ஒரு நாள் ஒரு எண்ணம் தோன்றியது. 'இவ்வளவு வருடங்களாக இதையெல்லாம் தவறாமல் முறையாகச் செய்து வருகிறோமே, நமக்கும் வயதாகி விட்டது, இனிமேல் இதையெல்லாம் விட்டு விட்டால் என்ன?' என்று யோசித்தேன். இப்போது சில அனுஷ்டானங்களை விட்டு விட்டு நிம்மதியாக இருக்கிறேன்.

"உங்களால் தண்ணீர் இழுக்க முடியவில்லை என்றால் என்னை எழுப்பி இருந்தால் நான் தண்ணீர் இழுத்துக் கொடுத்திருப்பேனே!" என்றாள் பங்கஜம் ஆதங்கத்துடன்.

"நீ ஏற்கெனவே வீட்டு உபயோகத்துக்காக நாள் முழுவதும் தண்ணீர் இழுத்தும் வெளியிலிருந்து நீர் சுமந்து வந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறாய். நான் வேறு உனக்குக் கஷ்டம் கொடுக்க வேண்டுமா?"

"உங்கள் அனுஷ்டானங்களுக்கு உதவி செய்வது எனக்கு ஒரு கஷ்டமா?"

"அனுஷ்டானம் என்பது தன் உடலை வருத்திக் கொண்டு ஒருவர் செய்ய வேண்டிய செயல். மற்றவர்களைக் கஷ்டப்படுத்திச் செய்வதற்குப் பெயர் அனுஷ்டானம் இல்லை, அக்கிரமம். மழை பெய்யாதது எப்படிப்பட்ட பாதிப்புகளையெல்லாம் ஏற்படுத்துகிறது பார்த்தாயா? ஒரு புறம் மற்றவர் நலனுக்காகச்  செய்யப்படும் தானங்கள் நின்று போகின்றன. மறுபுறம் ஒரு மனிதன் தன்னுடைய உயர்வுக்காகச் செய்யும் தவம் போன்ற செயல்களும் நின்று போகின்றன. மழை பொய்ப்பது என்பது பெரிய கொடுமைதான்!" என்றார்.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்.




திருக்குறள் கதைகள் - குறள் 18

  திருக்குறள் கதைகள்

இயல்: பாயிரவியல்

பால்: அறத்துப்பால்

அதிகாரம்: 2 [வான் சிறப்பு]


குறள் 18:

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


பொருள்:

வானிலிருந்து பெய்ய வேண்டிய மழை பெய்யாவிட்டால் வான் உலகில் வாழும் தெய்வங்களுக்கு நடக்க வேண்டிய பூசைகள் கூட நடக்காது.


கதை:

நாச்சிமுத்து கவலையாக உட்கார்ந்து இருந்தார்.

என்ன? கவலையா உட்கார்ந்து இருக்க என்று ஆத்தா கேட்க

இந்த வருஷம் ஊர் திருவிழா நடத்தறதா பஞ்சாயத்தில பேசி முடிவு எடுத்து இருக்கோம்.

நல்ல விசயம் தானடா. அதுக்கு எதுக்கு உம்முனு இருக்க? என்றாள் ஆத்தா.

ம்ம்ம்...."என்னத்தைச் சொல்றது? போன வருஷம் வசூல் ஆனதில் கால் பங்கு கூட வசூலாகலை. எப்பவும் தாரளமாகக்  கொடுக்கறவங்க கூட இந்த வருஷம் குறைவாத்தான் குடுத்தாங்க. எல்லாத்தையும் விடக் கொடுமை என்னன்னா, சில பேரு 'இவ்வளவு பணம் செலவழிச்சுத் திருவிழா நடத்தணுமா?'ன்னு கேக்கறாங்க. சில பேரு பிடிவாதமா பத்து ரூபாய் கூடக் கொடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க.

"இந்த வருஷம் வசூல் ஏன் இவ்வளவு குறைவுன்னு தெரியாதா?" என்றாள் ஆத்தா.

"தெரியாமல் என்ன? மழை பெய்யாததால விவசாயம் நடக்கல. ஊர்ல மத்த தொழில் செய்யறவங்களுக்கும் வருமானம் குறைஞ்சு போச்சு. யார் கிட்டேயும் காசு இல்லே. காசு இருந்தாலும் நம்ம தேவைக்கே போதாதபோது கோவில் திருவிழாவுக்குக்  கொடுக்கணுமான்னு யோசிக்கிறாங்க!"

"ஊர்ல மழை பெய்யாமல் விவசாயம் குன்றிப் போனா, திருவிழாக்கள் நடத்தறதில மக்களுக்கு எப்படி உற்சாகம் இருக்கும்?".இந்த வருஷம் திருவிழா வேண்டாம். வசூல் பண்ணின பணத்தைத் திருப்பிக் கொடுத்துடுங்க. அடுத்த வருஷம் நல்லபடியா விழாவை நடத்திடலாம்" என்றாள் ஆத்தா.

"ஆத்தா, நீங்க என்ன சொல்லுறீங்க?".

"விழா நடத்தலேன்னா சாமிக்குத்தம் ஆகி விடாதா?' என்றார் நாச்சிமுத்து.\

"மழை பெய்ய வைக்க வேண்டியது சாமிதானே? மழை பெய்யலேன்னா அது சாமியோட குத்தம் இல்லையா?. நாம வருஷா வருஷம் விழா நடத்திக்கிட்டுத்தானே இருக்கோம்? இந்த வருஷம் நாம விழா நடத்தலேன்னா அதுக்கு என்ன காரணம்னு சாமிக்குத் தெரியாதா? மழை பெய்து மக்கள் வளமாக இருந்தால்தானே சாமிக்கு விழா எல்லாம் எடுக்க முடியும்? குடும்பத்தை நடத்தறத்துக்கே கஷ்டப்படுகிற மனுஷன் சாமிக்கு விழா எடுக்கறதைப் பத்தி எப்படி யோசிக்க முடியும்?" என்றாள் ஆத்தா.

சிறிது நேரத்தில் நாச்சிமுத்து எங்கயோ கிளம்புவது தெரிந்தது.

ஏலேய் என்ன எங்கயோ கிளம்பிட்டே. சாப்பிட்டு போ என்றாள் ஆத்தா.

"இந்த விசயத்தை பஞ்சாயத்தில் பேசி தான் ஆத்தா முடிவு எடுக்க முடியும். நான் உடனே பஞ்சாயத்தை கூட்டி முடிவு எடுத்துட்டு வந்துறேன்". நீ சாப்பிட்டு படுத்துக்க ஆத்தா. என்றார் நாச்சிமுத்து.


காணொளி வடிவில் காண கீழே உள்ள youtube லிங்க்-ஐ கிளிக் செய்யவும்